வசந்த காலம், 2016.
Beckyதான் வெளிக்கதவை திறந்தாள். நல்ல சுருங்கிய சருமம், வயது எப்படியும் ஐம்பதுகளின் ஆரம்பங்களில் நின்றுகொண்டு இதற்குமேல் முன் செல்ல முரண்பட்டுக்கொண்டிருக்கும். Sandra வுக்கும் இதை ஒப்பாக சொல்லலாம். கூர்ந்து கவனித்தால் இருவருக்கும் இருக்கும் வித்யாசம் அறிவு, தத்துவவாத கீற்றுகளின் சார்புடையது என்பது அங்கு தங்கி இருந்த நாட்களில் புரிந்து கொண்டேன். Sandra 1990களில் Melbourneனின் corporate வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இருந்த property financing firm ஒன்றின் மிக முக்கியமான ஒரு analystஆக இருந்து பின் ஓய்வுபெற்று இப்போது துணை பேராசியராக Melbourne பல்கலைக்கழகத்தில் பின்நவீனத்துவ பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்துவருகிறாள். Sandraவின் கண்கள் எப்பொழுதும் தளர்ந்ததே காணப்படும், உயிரோட்டம் இல்லாதது போல காட்சி தரவும் செய்தது. Becky சற்று வேறுபட்ட மனப்பான்மையை, rationaleஐ கொண்டவள், அருகில் ஓடும் யார்ரா நதியினை சுத்தப்படுத்தி, தூய்மை படுத்தும் பணிகளின் துடுப்பாக இருந்து அதை ஒரு சமூக பூங்காவாக மாற்றியதில் பெரும்பங்கு உள்ள, அந்த ஏரியாவின் பெரியக் கை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், 1998ஆம் ஆண்டு நடந்த mayor தேர்தலின் போது Democrats, Labour மற்றும் Green என்று மூன்று தரப்பினராலும் ஆதரவிற்காக அணுகப்பட்ட ஒரு சமூக பிரஜை.
இந்த Semester விடுமுறையில், நான் Beckyயின் வீட்டில் தங்கி இருந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக யார்ரா கரையோரத்தில் உள்ள “The Farm” உணவகத்தில் ஒரு Croissantஐ on the houseஇல் தந்தார்கள், அது வரை யாரேனும் croissantஐ பற்றி பேசினாலோ, சாப்பிடுவதை பார்த்தாலோ அது ஒரு இனிப்பான ரொட்டிதான் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அன்று பாருங்கள், முதல் வாயில் அது பசியின் தேவையை பூர்த்திசெய்ய சற்று அடைப்பண்டம் போலவும், இனிக்கிறதா இல்லையா என்று தெரியாமல் மீண்டும் ஒருமுறை நாக்கு வாய் முழுதும் உலா செல்லும் அளவிற்கு அதன் சுவை ஒரு ரகமாகத்தான் இருந்தது. அநேகமாக இலவசமாக கிடைத்ததினாலோ என்னவோ ?!. Becky மற்றும் Sandraவின் வீட்டின் மேல் மாடியில், Collingwood எனப்படும் பகுதியில் தங்கியிருந்தேன். எப்படி இவர்கள் சித்தாந்த ரீதியில் பிளவு பட்டும், வீட்டு வாழ்க்கையில் ஒன்றாக இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள கடினமாக இருந்தது. நாம் அணிந்திருக்கும் கடிவாளம் சற்று பலமானது அல்லவா?
என்னுடன் Sydneyயில் Urban Design படித்துவருபவள், Yarra. Yarra சொல்லித்தான் நான் Melbourne வந்தேன், அவளுக்கு நான் என்ன மாதிரியான பின்பத்தை தந்துவிட்டேன் என்று தெரியவில்லை . Semester விடுமுறையில் என்னை Melbourne போய் வரச்சொல்லி தூண்டியது அவள்தான். இதை எழுத முடியாமல் தவித்த நாட்களில் முக்கியமான சில குறிப்புகளை தந்து உதவிய அருமை தோழி Yarra. Yarra, Sandraவின் மகள், வசந்த காலத்தில் முழுதுமாய் உயிர் பெற்றெழுந்த ஒரு சிறிய சிற்றோடையின் இரைச்சலை போல நம்மை கடந்து செல்வாள். Becky யிடம் வளர்ந்திருக்க கூடும் என்று நினைத்து கொள்வேன். இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன், உணவு அருந்தும் அறையில் Becky, George Orwellலுடன் நிற்கும் படம் தொங்கி கொண்டிருந்தது. இப்போது உங்களுக்கு புரிந்திருக்க கூடும்.
இந்த முழு முன்னூட்டலுமே எதற்காக ஒரு நகர்ப்புற வடிவமைப்பை, நகரங்களை பற்றி புரிந்துகொள்ள நினைக்கும் ஒரு உரையாடலில் இடம்பெற வேண்டும்? ஒரு ஆராய்ச்சி கட்டுரையில்(!?) இடம்பெற வேண்டும்? நகரங்கள் நகர்ந்து கொன்டே வருகின்றன. ஒரு நகர்வாசியாக இல்லாமல், நகரத்திற்குச் செல்லும் ஒரு பிரதான நெடுஞ்சாலையில் நின்று பார்க்கும் எனக்கு, நகரமும் அதன் கிளைகளும் நகர்ந்து கொன்டே வருகிறது, என்னையும் கண்டிப்பாக அது விழுங்கிச் சென்றுவிடும், நான் இங்கேயே நின்றுவிடுவேனாயின்.
தன் ஆற்றளை(களை) மீறி, சக்தியை(களை) மீறி ஒரு பெரிய வலையினை போல நகரத்தின் எல்லைகள் நிலப்பரப்பையும், அதன் புலன்களையும் உட்கொண்டு வருகிறது. வலை என்று நான் சொல்லும் போது அதில் இருக்கும் நரம்புகளின் இடை பின்னல்களை நாம் கவனிக்கவேண்டும், இதில் இருக்கும் Intricate systems தான் இந்த வலையின் கட்டுமானத்தின் வலுவூட்டமாகும்.
விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பரவிக்கிடக்கும் வலை பின்னல்களின் நரம்புகள் சிலவற்றினை மட்டும் பிரதான நரம்புகளாக ஆக்கிக்கொள்வோம் என்றால் வலை தாங்கிக்கொள்ளும் என்பது ஒரு ஞாயமான தர்க்கம், அனால் இதை பல complex systemகளுக்குள் இயக்குவிக்கும்போதுதான் இந்தத் தர்க்கம் எப்படி செயலிழந்து போகிறது என்பதை காண இயல்கிறது. Idealism (இசத்தின்)விளைவுகள் தான். Idealism என்றால் ஒன்றுமில்லை, பொதுமை படுத்தப்படும் கருத்தியல் (A total, absolute model).
பிரதான நரம்புகளின்த் தடியினை(Thickness) மாற்றி அமைத்தல் ஒருவித networking strategy, இதைத்தான் உலகத்தின் பல நகரங்கள் செய்து வருகின்றன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு Transit Oriented Development (போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி). Singapore, Los Angeles என உதாரணங்களை அடுக்கி கொன்டே போகலாம். இந்த வரையறைகள் யாவும், நகரத்தின் மையத்தை சார்ந்து இயங்கும் பொருளாதார கட்டமைப்பிற்கு சொல்லப்படும் உதாரணம் (CBD – மையப்படுத்தப்பட்ட பொருளாதார மாவட்டம்). உலகில் பெரும்பாலான நகரங்கள் இதன் இயக்கவியலில் இருந்து மீள முயற்சி செய்து வருவது ஒரு ஆரோக்கியமான critical discourse, இதெல்லாம் மையப்படுத்துதலின் குறைபாடுகள், வரம்புகள்.
சுற்றி பாருங்கள், எங்கே உட்காந்து இதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
நாம் வாழும் வீடும், தெருவும்,அக்கம் பக்கமும் அதன் எல்லைகளும், வேலைக்கு செல்லும் பஸ் ஸ்டாண்டும், ரயில் நிலையமும், காய்கறி வாங்கிய சந்தைகளும், மளிகை வாங்கிய கடைத்தெருக்களும் பல மாற்றங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் நம்மை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பொருளாதார மூலோபாயம்(Strategy).
வளர்ச்சி தவிர்க்கமுடியாதது, ஏனென்றால் வளர்ச்சி ஒரு தனி மனிதனின் ஆசைகளின் வெளிப்பாடு. இப்படித்தான் ஒரு நகரம் பல்வேறு தனிநபர் ஆசைகளின் கூட்டு, கூட்டு விருப்பம் (collective interest) இந்த நூற்றாண்டின் ஆட்சி/அரசியல் துரையின் intentடிடம் இருக்கும் commodity, Space, சரக்கு(ஒரு gamble போல). இதைப் பற்றிய உரையாடலை மற்றொரு தனி பெரும் தருணத்தில் தான் விவாதிக்க வேண்டும்.
நாம் இந்த சமுதாயத்தின் கூட்டு விருப்பம் பற்றியும் அரசினால் அதற்கு ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு பற்றியும் பார்க்க வேண்டும். அதன் வடிவமைப்பில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம், அந்த கட்டமைப்பின் மூலாபாயத்திற்கேற்ப வளர்ச்சியும் அதன் விளைவுகளும் அனுமானிக்க படுகின்றன. இந்த அனுமானங்கள் ஒரு கட்டமைப்பின் அச்சுக்களை விட்டுச் செல்கின்றது, ஏற்கனவே இருக்கும் அச்சுக்களின் மேல் மற்றொரு கட்டமைப்பு படிமமாக வந்தும் உட்காருகிறது. இதோ இதுதான் இன்றைய நகரங்களின் anatomy.
முந்தைய paragraphஇல் சொல்லியிருந்தேன் அல்லவா ? Idealism ஒரு பொதுமை படுத்தப்பட்ட கருத்தியல் தன்மையென்று, இதில் இருந்துதான் ஒரு யோசனை கீறல் ஆரம்பிக்கும் அதில் எந்த முரண்பாடும் எனக்கில்லை. இந்த யோசனையை விவரிக்காமல் விட்டுவிடுவதுதான் இங்கு இம்சையாகிவிடுகிறது.
பொதுவான கருத்துக்களும், அதன் மேல் கட்டப்படும் கருத்தியல் கொள்கைகளையும் சற்று (சற்று என்ன சற்று இனி சுத்தமாக, “let the folks on the hill” take care of these pretty little humbugs என்று) மூட்டை கட்டிவிடுவோம், எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று pragmatism தேவை period. Lefebvreஐ சுவாசித்து தொலைத்தாயிற்றே, idealism என்றால் allergy.
“Flat white with one sugar” என்ற ஒரு குரல். (என் பெயரை சொல்லி அழைப்பதும் இந்த coffeeஐ ஆர்டர் செய்வதும் ஒன்றே) நினைவு பின்னல்களில் இருந்திருப்பேன் போல. மீண்டும் “Flat white with one sugar, right ?”, எங்கள் இருவருக்கும் coffee ஆர்டர் செய்துகொண்டிருந்தாள் Yarra, வீட்டில் சகஜமாக எங்களால் உரையாட முடியவில்லை. நான் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு பிறகுதான் Yarra, Sydneyயில் இருந்து Melbourne வந்தாள்.
Yarraவுக்கு எனது நிலைகொள்ளாத unsettledஆன மனநிலை வெளிப்படையாக தெரிந்திருக்கக்கூடும், எங்கள் Tableலில் நடந்த உரையாடலின் எல்லா அங்கத்தையும் Yarra கவனமாக கேட்டு வருகிறாள், எதாவுது cues கிடைக்குமா என்று புரட்டிப் பார்க்கிறாள். Coffeeயின் ஸ்லுர்ர்ப் என்னும் உறிஞ்சலில் ஓரத்தில் ஒரு பார்வை பரிமாற்றம். ஒரு தயக்கம்.
“எதற்காக நான் இங்கு வந்தேன் யார்ரா? என் புலன்களுக்கும், மூளைக்கும், மனதிற்கும் என்ன வேலை உன் நகரத்தில் ?”
இதை எல்லாம் எப்படி கேட்பது, நீங்களும் வேலையை விட்டு படித்து கொண்டிருக்கிறீர்கள். Yarra உடனான coffee table உரையாடலுக்கு நடுவே, கவனம் சிதறி Yarra இங்கு வந்து சேர்வதற்கு முந்தைய நாள் Beckyயும் நானும் collingwoodஇல் மாலை உலா சென்றதை பற்றி நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் Yarraவோ, சிட்னியில் கிடைத்திருக்கும் அவள் தனது புதிய வேலையின் அனுபவத்தை பற்றி கூறி கொண்டிருந்தாள். கவனிக்கும் பாணியில் தலை அசைத்தபடி (அங்கங்கே சிரித்து கொள்ளவது அவசியம்) Beckyயுடனான உரையாடல்களின் நினைவுகளில் பின்னிப்போயிருந்தேன். Becky சொன்னதை எப்படி யார்ராவிடம் articulate செய்வது ? அதற்கு என்ன respond செய்வாள் ?
இதற்கு மேல், beckyயுடனான உரையாடலின் articulationஐ Yarra விடம் பேசுவதற்காக தயார் செய்து கொண்டு வரும் என் எண்ணஓட்டங்களை இப்போது படிக்கப்போகிறீர்கள்.
……உம்ம்ம்ம்ம்ம்…ஹ்ஹ்ஹ..இந் இந்திய……. இந்திய நகரங்களை வளர்ச்சி அடைந்த நகரங்களுடன் ஒப்பிட்டு வருகிறேனா நான்? ஒப்பிட்டு நமது நகரங்களை முன்னேற்ற குறிப்புகள் எடுத்து வருகிறேனா ? “How arbitrary and ideal?” என்று Yarra சொல்லிவிடுவாள். உண்மையிலே அது கிடையாது.
“ஏன்டா மாப்ள, துபாய் ரோட பாத்திருக்கிறியாடா நீயி?” ங்கிற பாணியில் நகரங்களை பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடாது, மாற்றாக பிரச்சனைகளை ஒரு நகரம் எப்படி கொள்கை (Principles) ரீதியாக அணுகுகிறது என்பதை தான் நாம் உணர வேண்டும், இருந்தாலும் ஒரு emphirical(ஆதாரத்தின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்கும் முறை) முறை அவசியம். “எங்க முன்னோர்களெல்லாம் அந்தக்காலத்திலேயே…” என்று பேசும் Radical conservative argumentsசுக்கும் (தீவிர பழமைவாத வாதங்கள்), எல்லாக்கோட்டையும் அளித்துவிட்டு முதலில் இருந்து பரோட்டா போட சொல்வதை போல, சர்வாதிகாரம் தான் நாட்டை காப்பாற்றும் என்று பேசும் Irrational idealistic notionsகளுக்கும் (பகுத்தறிவற்ற கருத்தியல்) அடியில்தான் pragmatism புதைந்து கிடக்கிறது.
1986இன் ஆரம்பங்களில் யார்ரா நதியின் திட்டகுழுவின் முக்கியமான பதவியை Becky ஏற்றுக்கொள்ளாததுக்கான காரணம், கட்சியில் பணியாற்றினால் எதற்காக நாம் ஈடுபடுகிறோமோ அதன் தன்மை dilute ஆகிவிடும் என்று நினைத்தாள். Collingwood post-Industrial revolutionனின், Post-warரின் காலகட்டங்களில் அதன் மதுவடிக்கும் தொழிற்சாலைகளையும், தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் அன்றைய மெல்போர்ன் அரசு இடமாற்றியது.
இதனால் உண்டான காலி கிடங்குகள், Gold Rushசின் காரணத்தினால் வந்தேறிய மக்கள் கூட்டத்தின் வீட்டுவசதி பற்றாக்குறை, மாசுபட்ட யார்ரா நதியின் நிலை என்று எல்லா நகரங்களையும் போல ஆரம்பக்கால பிரெச்சனைகளை உள்ளடுக்கி கொண்டிருந்தது Collingwood. Sandraவின் firmமுக்கு இந்த நிலங்களின் மேல் ஒரு கண் (இல்லை இல்லை, பெருங்கண்). இப்படி அன்றைக்கு இருந்த developers, ஆட்சியில் இருந்த Labour Government, வீட்டுவசதி குன்றிய Collingwoodடின் மக்கள் என்று மூன்று தரப்பினரும் ஒவ்வொருவரின் தேவைகளின் அடிப்படையில் மோதிக்கொண்டது யார்ரா நதியின் இருப்பினையும் அதன் பராமரிப்பையும் மறக்கடிக்க செய்தது. Becky பணியாற்றிய Collingwood Homeless hallலின் உருமாற்றம் தான் இன்று இருக்கும் Council for homeless. Beckyயின் நேர்த்தியான வேலை இங்குதான் இருக்கிறது, இந்த தேவைகள் யாவையும் சமமாக மதிப்பிட முடியாது என்று Councilலின் (நகரத்தின் நிர்வாகம்) பார்வையை மாற்றியது அதனினுல் முக்கியமான ஒன்று.
1960களின் Melbourneன்னில் நடந்த பெரும்பாலான சமூக வீட்டுவசதி திட்டங்கள் Le Corbusierரின் modelக்கேற்ப ஒரு பூங்காவின் நடுவே உயரமான கட்டிடங்களால் நிரப்பப்பட்டதை போல காட்சியளித்தது. இதன் அடித்தளம் concreteடின் பயன்பாட்டில் நாம் கண்ட புதுமைகள் ஒருபக்கம் இருந்தாலும், 1930களில் ரஷ்யா மற்றும் ஜெர்மனியின் பேரியக்கங்களான Vkhutemas, Bahausஇல் தொடங்கிய modernism. modernism(இசத்தின்) அலையினால் ஆன தாக்கம் இது என்பதையும் மறுக்கமுடியாது. சித்தாந்த ரீதியில் மனிதர்களை மீறிய ஒரு ergonomicsசுக்காக, அதாவது வாகனங்களின் இயக்கவியலுக்கேற்ப நகரங்கள் வடிவமைக்க பட துவங்கிய காலகட்டம்.
சமூக வீட்டுவசதி திட்டத்திற்கான நிலத்தினை Council தொழிற்சாலை முதலாளிகளிடம் இருந்து வாங்க முயற்சிப்பதற்குள் developers அதற்கு முந்திக்கொண்டு அதிக விலையினை பேசிவர, councilலால் செலவழிக்க(unaffordable) முடியாத அளவிற்கு விலை உயர்ந்து விட்டதாம்(Huxley, Margo 2002). இப்போது சமூக வீட்டுவசதி திட்டத்திற்கு போதிய நிலம் கிடையாது, யார்ராவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொன்டே போயிருந்தது.
Becky செய்த இரண்டாவது முக்கியமான நகர்வு, Councilளுக்கு அழுத்தம் கொடுத்து Collingwoodடின் பிரதான சாலைகளை ஒட்டிய நிலங்களை, முக்கியமாக இந்த developersகளுக்கு சொந்தமான நிலங்களை வணிக பயன்பாட்டிற்கு மாற்றியது. இதில் என்ன விஷயம் என்றால் வணிக நில பயன்பாட்டிற்காக ஒரு property owner/ developer கட்ட வேண்டிய யானை அளவு சிறப்பு வரிகளை (Value Capture, Section 94) சலுகை செய்து Developersஸை இந்த வணிக நிலப்பயன்பாட்டின் வளர்ச்சியின் பக்கம் திசை திரும்பியதினால், அவர்கள் விலையை உயர்த்தி வைத்திருந்த சமூக வீட்டுவசதி திட்டத்திற்கான நிலங்களின் விலை மெதுவாக இறங்கிவிட வீட்டு வசதி திட்டம் இன்று சாத்தியமாயிற்று.
Becky யின் கடைசி முக்கியமான நகர்வு, ஒரு கிராமமாக Collingwood மக்கள் யார்ரா நதி கரை பேணித்து பராமரித்து வர அவள் சாதனம் செய்த “The Farm” என்னும் அமைப்பு. பின் நாட்களில் அதன் நடைமுறை சாத்திய குறைகளினால் அது யூகிக்க பட்ட அளவிற்கு ஒரு சமூகத்தின் பொது விவசாய தளமாக இயங்கவில்லை, அனால் இன்னுமும் Collingwood குடியிருப்பினர் ஒரு குறிப்பிட்ட தொகையை யார்ராவின் பராமரிப்பிற்காக அன்பளித்து வருகின்றன.
இன்றைக்கு Councilலும் சரி, Stateடும் சரி, Collingwoodடின் வணிக நிலப்பயன்பாட்டின் வரி சலுகையை நகரத்தின் மற்ற பகுதிகளுடன் சீராக ஆக்கிக்கொள்ள மெனக்கெட்டு வருகிறது, நிச்சயமாக நான் மெச்சும் அளவிற்கு Beckyயை அவர்கள் மெச்சமாட்டார்கள் என்பது உண்மைதான். இந்த gamble எல்லாவற்றையும் அடுத்த அரசு ஆட்சிக்கு வந்தபின் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, கண்டுகொள்ளும் அளவிற்கு முக்கியமான பிரச்னையாக அந்த ஆட்சிக்கு தெரியவில்லை என்கிறாள் Becky. அவளை பொறுத்த வரை இந்த projectஐ பற்றி பேசினால் “Well, It didnt quite pan out” என்று சொல்லிவிடுவாள். தலைமையும், புகழும் காலத்தின் போக்கில் வீழத்தானே உதயமாகிறது. இதை உணர்ந்து பெருமூச்சு விடுகையில்தான் யார்ராக் கரையில் வசந்தகால பூக்களின் வாசனை மூக்கை நிரப்புகிறது.
Beckyயை தொடர்ந்து அடுத்த தலைமுறையில் சமூக ஆர்வலர்கள் இத்தகைய பொதுநல வாதங்களில் நடத்தி வருகிறார்கள், வீட்டிற்கு திரும்பும் வழியில் இதன் குரல்கள், கூச்சல்கள், மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்ட அரசியல் விமர்சனப் பகடிகள் என்று Collingwoodஇன் எதிர்ப்பு குரல்கள் சுவர்களில் Graffitti மூலமாகவும், பார்களின் வெளியே ஒட்டப்பட்டிருக்கும் Flyers மூலமாகவும் படர்ந்து கிடந்தது. குடிப்பதே அரசியல் பயில தான் என்று Becky ஒரு இடதுசாரிய joke ஒன்றை சொல்கிறாள். சிரிப்பதா சிந்திப்பதா என்று தெரியவில்லை. இந்த தொடர்ச்சியான நிகழ்வுகளில் எது sensibleலான முடிவு என்று ஒரு ஆய்வுக்கு வரமுடியுமா?
Becky, ஒரு நகர அமைப்பின் பல்வேறு தரப்பினரின் Conflictஐ சமன் செய்வதில் வெளிப்படுத்திய pragmatism, Yarraவின் சமூக மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பதில் சற்று தொய்வுற்றது. அனால் 200 குடும்பங்களுக்கு வீட்டுவசதி கிடைத்தது உண்மை, யார்ரா பராமரிக்கப்பட்டது உண்மை, Developers and Investors நகரத்தின் வளர்ச்சியையும் தங்களது Capital growthஐ பன்மடங்கு வளர்தததும் உண்மை. Council இதில் காசு பார்த்ததும் உண்மை. எப்படி இது சாத்தியம் ஆயிற்று ? தெரியவில்லை. But i know something, Becky ஒன்றும் ஓசியாகவெல்லாம் வேலை செய்யவில்லை. என்னோடு சிட்னியில் படிக்கும் Yarraவின் Tution feeயின் ஒரு பகுதியினை Becky தான் பார்த்துக்கொள்கிறாள். Collingwood Homeless hallளுக்கு முறையான விதத்தில் Collingwood குடியிருப்பு அமைப்பினரால் consultation fee வழங்கப்பட்டது.
நானும் Yarraவும் coffee shopஇன் வெளியே இருந்த grafitti சுவர்களை வெறித்து பார்த்தபடி யோசித்து கொண்டிருக்கிறேன். அந்த சுவரின் புரியாத எழுத்துக்கள் போக குய்ப்பிடத்தக்க ஓவியம் ஒன்றின் மீது கவனம் குவிகிறது. அந்த ஓவியத்தில் கார்ல் மார்க்ஸின் முகத்தில் gas mask போடப்பட்டு அருகில் இருந்த பெண் உருவம்(சரியாக தெரியவில்லை, ஜென்னி மார்ஸ் என்று நினைக்கிறன்), மார்க்ஸின் முகத்தில் ‘love’ என்று எழுத பட்ட(கோக்கோகோலா குளிர்பானத்தின் வடிவமைப்பில் வரையப்பட்ட இருந்த) பாட்டலினால் விஷவாயுவை அடித்தபடி நிற்கிறாள்.
Yarraவிடம், உங்களிடம் சொன்ன எல்லாவற்றையும் கொட்டிவிட்டேன். அவள் மிக பொறுமையாக நான் பேசிமுடிக்கும் வரை தலை அசைத்துக்கொண்டிருந்தால், பேசிமுடித்தப்பிறகும் தலை அசைந்துக் கொண்டிருக்க, என்னதிது? நம்மை போலவே வேற ஏதோ யோசித்துக்கொண்டிருக்கிறாளோ என்ற பயம் வேற எனக்கு.
என் கண்களினுள், கருவிழினை பார்க்காமல், வேறெங்கோ கவனமாக பார்த்துகொன்டே இருந்தாள், எனது ஒரு கண்சிமிட்டலின் முடிவில் “Spot On !” என்றாள் Yarra, இதற்குதான் நீ இங்கு வந்திருக்கிறாய் என்கிறதை போன்ற ஒரு confirming gesture ஒன்றை தருகிறாள்.
எது தேவை? எதனினுள் அவசியம், அனாவசியம் அடங்கும்? ஒரு நிலையினை பார்த்ததே இல்லையென்றால் அதை எப்படி conceive செய்வது? conceptionனின் வரம்புகளினிலேயே அடங்கி விடும் நமது கற்பனைகள். ஒரு மனிதனின் நினைவாற்றல்/consiousness சொற்களினால் வரையறை செய்யப்படுகிறது என்று Yarra கூறுகிறாள் (Orwellலின் தாக்கம் தான் வேற யாரு?), அதே போலஒரு நகரத்தின் நினைவாற்றல்/consiousness அதன் literal வரையறையான City planning மற்றும் அதன் systems programmingகுக்குள் எளிதாக அடக்கம் செய்து விடலாம். இந்த consiousnessஐ தாண்டி, rigidityஐ உடைத்து பிறக்கும் subconsiousness தான் நகரத்தின் குரல்களை, ஆன்மாவினை சுமந்து செல்கிறது.
ஒரு தனி நபரின் நிபுணத்துவதினால்தான் ஒரு நகரம் வடிவமைக்கப் படுகின்றதென்பதும், அவர் மேசையில் உட்காந்து கிறுக்கி வைத்த கோடுகள் தெருக்கலாக உருமாறி அதில் தான் நடந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, என்னை ஒரு கும் இருட்டில் தலையை சுற்றி போர்வையை போர்த்தி ஊமைக்குத்து குத்துவதை போல இருந்தது இக்கதையின் யதார்த்தம்.
நகரத்தின் வெளியினை உருவாக்குவது அந்தந்த காலத்தின் அரசியல்-பொருளாதாரம். Production of space/நகரத்தில் வெளியின் தயாரிப்பு, வெளி சார்ந்த அரசியல் சார்ந்த பொருளாதாரம்(த்தினால்) / spatial political economyயினால் (Cuthbert, 2006) தான் இயக்கப்படுகிறது என்ற Yarraவின் கருத்தினை நாம் தீவிரமாக பரிசீலனைக்க வேண்டியது இருக்கிறது. நமது contextடில் ஒரே நேரத்தில் இதுவரை சகமனிதர்கள் செய்தது எல்லாத்தையும் கூண்டோடு அவமதிப்பு செய்து, ஒரு clean slateடின் கவர்ச்சிக்கு மயங்கும் மனநிலை ஒரு பக்கம். இது எதுவுமே நடக்காது, விரக்தியில் ஒரு collective identityயை நமது ஈகோவிற்கு இரையாக்கி கொண்டுவிடும் மனநிலை ஒரு பக்கம். இவ்விரண்டையும் அரசியல் போதனைகளின் (political indoctrination) விளைவுதான்.
சில நேரங்களில் ஒரு கதையில் இருந்து தான் நீட்சிகரமான சில கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. Yarra, Becky மற்றும் Sandra சக மனிதர்கள், ஒவ்வொரு மனிதனின் கதையும் நமக்கு ஒரு குறியீடு. நமக்கும் இந்த மனித குறியீடுகளுக்கும் இடையே இருக்கும் காலம்-வெளி இந்த இரண்டினையும் எடுத்துவிட்டால் நமது எண்ணங்கள் ஒன்றுக்கொன்று உரையாடத் தொடங்கும். கதைசொல்லிகளும் கதைகேட்பர்களும் தான் இந்த உலகத்தை இயக்குகிறார்கள். நமது நகரங்கள் யாருடாவை?, நாற்காலியை இழுத்துப்போட்டு அமருங்கள் உரையாடலாம் !
References:
Huxley, Margo. 2002, This suburb is of value to the whole of Melbourne: Save Our Suburbs and the struggle against inappropriate development [Working papers; no. 6]. Melbourne; Institute for Social Research, Swinburne University.
Cuthbert, Alexander R. 2006, The form of cities: political economy and urban design Blackwell Malden, Mass. 66-69.
Gargiani, R., & Piccolo, S. (2008). Rem koolhaas/OMA : The construction of merveilles (1st ed. ed., Essays in architecture). Lausanne: EPFL Press.
Media reference:
1. https://www.youtube.com/watch?v=Cb3CKEpGnu4
This article is the first in a series of bilingual (Tamil and English) articles that explore the idea of urbanism in its native, raw format in its context using storytelling as a narrative tool. For the English version, click here.
In collaboration with Siva Subramanian of ‘The Nomad Culture‘.